Friday, August 31, 2012

சாதனையாளர்களை மீட்ட வீரர்கள்

இற்றைக்கு 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "நாசா' வின் வரலாற்றில் அரும்பெரும் சாதனையொன்று படைக்கப்பட்டிருந்தமை உலகத்தார் அனைவரும் அறிந்ததே.ஆமாம்! சந்திர மண்டலத்தில் முதன் முதலில் கால் பதித்தவர் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்ட நீல் ஆம்ஸ்ட்ரோங்கும் (Neil Armstrong) அவரது சகாக்களான மைக்கேல் கொலின்ஸ் (Michael Collins) பஸ் அல்ட்ரின் Buzz Addrinஆகியோருடன் இணைந்து அங்கு அமெரிக்காவின் தேசியக் கொடியை பறக்க விட்டிருந்தனர். இத்தகைய அரிய சாதனையை நிகழ்த்திய பின்னர், கடந்த 1969 ஜூலை 24 ஆம் திகதியன்று பூமியை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த இந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பான முறையில் வரவேற்று, வெளியே கொண்டு வந்து சேர்த்த பெருமைக்குரியவர்கள் யாவரென்பது எம்மில் பலருக்குத் தெரியவே தெரியாது. அமெரிக்க கடற்படையின் அனைத்து நுணுக்கங்களையும் அக்கு வேறாக, ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்து அவற்றில் தேர்ச்சி பெற்ற ' 'Seal'' என அழைக்கப்படும் அமெரிக்க கடற்படை வீரர்களான ஜோன் வூல்பிராம் (John Wolfradm) வெஸ் செசர் (Wes Chesser), கார்மிக்கேல் (Carmichael), மைக் மலோரி (Mike Mallory) ஆகிய நால்வருமே அவர்களாவர். மூன்று சரித்திர நாயகர்களையும் சுமந்தபடி பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த அப்பலோ 11 விண்கலம் பசுபிக் சமுத்திரத்தில் ஹவாய் தீவுகளுக்கு சுமார் 1000 மைல்களுக்கு அப்பால் அவர்கள் வந்திறங்கியதுமே கண்மூடித் திறப்பதற்குள் இந்த நான்கு கடற்படை வீரர்களும் ஸ்தலத்திற்கு விரைந்து சென்றனர். முழு உலகுமே பெரும் பரபரப்புடன் இந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கணத்தில் கடற்படை வீரர் ஜோன் வூல்பிராம், மணிக்கு 1000 மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்த விண்கலத்தில் வீரர்கள் அமர்ந்திருந்த மேற்பரப்பில் நீராவியால் உந்தப்பட்ட நிலையில் திடீரெனத் தாவிப் பாய்ந்தார். வூல் பிராம் ஆம்! இராட்சத அலைகளை அடித்தே குமுறிக் கொண்டிருந்த பசுபிக் சமுத்திரத்தை நோக்கி தனது ஒரு காலையும், விண் கலத்தில் ஒரு காலையும் வைத்திருந்தபடியே அவர், அந்த வரலாற்றுச் சாதனையாளர்களை உயிருடன் பாதுகாத்து வெளியே கொண்டு வரும் பொறுப்பு தனது கைகளிலேயே உள்ளதென உணர்ந்தார். இது குறித்து வூல்பிராம் தெரிவிக்கையில், ""விண்வெளி வீரர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்கவென நான் விண்கலக் கதவின் யன்னல் ஊடாக எட்டிப் பார்த்தேன். அவர்களோ என்னைக் கண்டதும் புன்னகை பூத்தபடி, ""அனைத்தும் வெற்றியே'' என்பதை தங்கள் பெருவிரல்களை அசைத்தபடி சைகை காட்டினர். அவர்களின் நலன்கள் பற்றி அறிந்து கொண்டதும் நாம் அவர்களை வெளியே கொண்டு வரத் தயாராகினோம்'' என்றார்.
அமெரிக்க கடற்படையில் விசேட Seal (நீர் நாய்கள்) படைப் பயிற்சியைப் பெற்றிருந்த வூல்பிராமும், அவரது அணியினரும் இதற்கு முன்னரும் "அப்பலோ'வின் சந்திர மண்டல ஆராய்ச்சிப் பணிகளில் பேருதவி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பலோ விண்கலத்தை பாதுகாத்து நிலை நிறுத்துதல், விண்வெளி வீரர்கள் மீதான களங்கத்தைப் போக்குதல், அமெரிக்க ஹோர்நெட் ((Hornett) எனப்படும் விமானந்தாங்கிக் கப்பலுக்குப் பாதுகாப்பளிக்கும் பொருட்டு, நீருக்கும் நிலத்திற்கும் மேலாகப் பறந்தபடி வட்டமிடும் உலங்கு வானூர்தியில் வீரர்களை ஏற்றுதல் போன்ற முக்கிய பணிகள் அவர்கள் முன்னே காத்திருந்தன. அப்பலோ ஐஐ விண்கலத்தினுள் "வூல்பிராம்' ஏறும் முன்னரே அவர் அதனை இறுகப் பற்ற வேண்டியதாயிருந்தது. உலங்கு வானூர்தியில் கீழே தொங்கிய நிலையில், அவர் குளிர்ச்சி தரும் நீரில் தாவிப் பாய்ந்தபடி உயர் தொழில்நுட்பம் வாய்ந்த முனையொன்றில் சுருக்குப் போடப்பட்ட நீளமான அந்த கயிற்றை அடைந்தார். 12,000 இறாத்தல் எடையுள்ளதும் மிதப்பதையும் தொங்குவதையும் தடுத்து நிறுத்துவதற்கெனப் பயன்படுத்தப்பட்டு வரும் கடலின் நங்கூரமென அழைக்கப்படும் கடலுக்கு அடியிலான "பரசூட்' (Parachute) முறைகளில் கைதேர்ந்தவரான அவரது அமானுஷ்ய வீர, தீரச் செயல்களையே அது உணர்த்துவதாக அமைந்தது. ""சந்திர மண்டல மனிதர்களின் மீள் வருகை'' பற்றிய (Moon Men Return) எனும் ஆங்கில நூலின் ஆசிரியரான ஸ்கொட் கார்மிக்கேல் தெரிவித்தார். பசுபிக் ஆழ்கடலில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த வரலாற்றுச் சாதனை புரிந்த விண்வெளிக் கப்பலில் பாய்ந்தேறுவதற்கு வூல்பிராம் ஒருகணம் தனது இலக்கைத் தவற விட்டிருப்பாராயின் அதனைப் பிடிப்பதற்கு அவருக்கு முடியாமற் போயிருந்திருக்கும். விண்வெளி வீரர்களுக்கு ஏமாற்றம் எதனையும் அளிக்காத விதத்திலும் உலகத்தாரை உற்று நோக்கிப் பார்க்க வைத்திடும் வகையிலும் தமது பணியைச் செவ்வனே செய்து முடித்தார். கர்ண கடூரமான பேச்சொலிகளைக் கொண்டிருந்த கடற்படை வீரர்களான வூல்பிராம், அவரது சக வீரர்களான வெஸ் செசர் மைக் மலோரி ஆகிய மூவரும் பன்னிரெண்டு அடி உயரமான ஆர்ப்பரித்துக் குமுறியெழும் சமுத்திர அலைகளுக்கும் மணிக்கு 28 மைல் வேகத்தில் வீசிய புயற் காற்றுக்கும் மத்தியில் அப்பலோ 11 விண்கலத்தைச் சுற்றி நின்ற 200 இறாத்தல் எடை கொண்ட மிதக்கும் கலத்தில் ஏறவெனப் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். தற்போது மிக்சிக்கன் மாநிலத்தில் உள்ள ஹார்ட்லாந்தில் (ஏச்ணூtடூச்ணஞீ) பயன்பாட்டு முறைமைகளில் பணியாற்றி வரும் 66 வயதான மகோரி, ""இந்தச் சாதனையைப் புரிந்த பயில்வான்கள் நாங்களே'' என நகைச்சுவையுடன் கூறினர். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளும், விண்கலத்தை வட்டமிட்ட கலத்தை கடற்படை வீரர்கள் எவ்வளவு விரைவாக சுற்றிக் கட்டுவதைப் பார்த்து வியந்தே போயினர். நானும் வூல்பிராமும் நீச்சலடிப்பதில் வல்லவர்கள் என்பதால் நாமிருவரும் விரைவாக நீந்திச் சென்று அந்தக் கலத்தைச் சுற்றிக் கட்டினோம்'' என்றார். கார்மிக்கேல் இதுபற்றி தெரிவிக்கையில், ""பசுபிக் சமுத்திர இராட்சத அலைகள் எம்மை நோக்கி சீறிப் பாய்ந்து வந்த போது நீச்சல் வீரரõன நண்பர் மலோரி, குதிரை போன்றே அதில் தாவிப் பாய்ந்து செயற்பட்டார்'' என்றார். இன்னுமொரு வீரரான செசர் இது குறித்து கூறுகையில், ""எப்போதுமே சாந்த சொரூபியாக இருக்கும் நண்பர் ""வெஸ்'' எதனை எவ்வாறு செய்ய வேண்டுமோ, அதனை அவ்வாறே கச்சிதமாகச் செய்து முடிப்பதில் வல்லவர்'' என புகழாரம் சூட்டினார்.
அந்த உயிர்காப்புத் தெப்பங்களில் (rafts) சென்றிருந்த இந்தக் கடற்படை வீரர்கள் நால்வரும், அப்பலோ 11 விண்கலத்தில் புகுந்து வீரர்கள் மூவரையும் வெளியே கொண்டு வந்ததுடன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான அணியின் தலைவர் ""கிளன்சி ஹட்டில் பேர்க்கும் (Glancy Hattleberg) விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ரோங், மைக்கேல் கொலின்ஸ், பஸ் அல்ட்ரின் ஆகிய மூவரும் பத்திரமாக வெளியேறி வர பெரிதும் உதவினார். வெளியேறிய விண்வெளி வீரர்களும்Seal கடற்படை வீரர்களும் உயிரியல் ரீதியாக தனியாகப் பிரிக்கப்பட்ட ஆடையணிகள் என அழைக்கப்படும் சந்திரமண்டலத்திலிருந்து அவர்களுக்குத் தெரியாமலேயே வீரர்கள் கொண்டு வந்திருக்கலாமென அஞ்சப்படும் உயிரியல் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் பொருட்டு விசேட அங்கிகளையும் முகமூடிகளையும் அவர்கள் அணிந்திருக்கக் காணப்பட்டனர். "பில்லி பவ்நெட்' என்ற சட்டை போன்ற கடற்படை படகொன்றில் ஏற்றப்பட்ட அப்பலோ 11 வீரர்கள் மூவரும் பின்னர் Hornett எனப்படும் அமெரிக்க விமானத் தாங்கிக் கப்பலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பலோ 11 இன் பின்னர் வூல்பிராமின் வாழ்வு திசை திரும்பியது. @தவாலய திருப்பலியொன்றில் கலந்து கொண்டதன் மூலமே இத்திடீர் திருப்பம் ஏற்பட்டதெனலாம். அந்தக் காலம்தொட்டு அவர் எல்லாம் வல்ல ஆண்டவனின் ஆணைப்படி தென்கிழக்காசியாவில் மதப் போதகராகச் சேவையாற்றி வருகின்றார். தற்போது அப்பலோ ஐஐ விண்கலம் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் அமைந்துள்ள விண்வெளி அருங்காட்சியகத்திற்கு (Space Museum) அவரும் அவரது சகாவான முன்னாள் கடற்படை வீரர் செசரும் Chesser அண்மையில் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மெட்ரோநியூஸ் 03/08/12

Wednesday, August 8, 2012

மனம் கவரும்பொண்ட் படங்கள்

திரைப்பட உலகில் 50 வருட கால வரலாற்றைக் கொண்ட ஜேம்ஸ் பொன்ட் திரைப்படக் காட்சிகளில் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல கவர்ச்சியான ஆடை அலங்காரங்களைக் கொண்ட படக் காட்சியொன்று உள்ள ""பாபிக்கன் நிலையத்தில்'' (Barbican Centre) ) தற்போது நடைபெற்று வருகின்றது. ""ஜேம்ஸ் பொன்ட் (James Bond திரைப்படங்கள் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் முகமாகவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்காட்சிகளில் பிரபல ஹொலிவுட் நடிகையான உர்சுலா அன்ட்ரெஸ் (Ursula Andress நீச்சலுடையில் (Bikini) ) தோன்றும் படங்கள் தொடக்கம் தற்போதைய பொண்ட் நடிகர் டானியல் கிறேய் இறுக்கமான நீல நிற நீச்சலுடையில் தோன்றும் படங்கள் வரையான படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1964 இல் வெளிவந்திருந்த சீன்கொனரி ஜேம்ஸ் பொன்ட் நடித்த அஸ்டன் மார்ட்டின் டி.பி. 5 (Aston Marein ) தொடக்கம் ஈடிஞு அணணிtடஞுணூ ஞீச்தூ திரைப்படத்திலிருந்து இவ் இரண்டு படங்களும் இதில் அடங்குகின்றன.
ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் என்றுமே மறக்க முடியாத மனங்கவர் காட்சிகளாக ஆங்கில சினிமா ரசிகர்களை ஆகர்ஷித்திருந்த காட்சிகள் பலவும் துப்பறியும் நிபுணராக நடித்த ஜேம்ஸ் பொன்டின் 50 வருட கால நினைவைக் கொண்டாடும் கண்காட்சியை மேலும் நிறைத்துள்ளன. திரைப்படத்தில் கடலுக்குள் இருந்தவாறு பிரபல நடிகை உர்சுலா ஆன்டசரெஸ் வெள்ளை நிற நீச்சலுடையில் தோன்றிய படமும் ''Die Another Day' ' திரைப்படத்தில் ஹலே பெரியின் இரண்டு படங்களுக்கருகில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. அத்துடன் Thunde ball திரைப்படத்தில் நடிகர் சீன் கொனரி அணிந்திருந்த காற்சட்டை மீளுருவாக்கம் செய்யப்பட்ட நிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் ''Casino Rogalle' திரைப்படத்தில் தற்போதைய ஜேம்ஸ் பொன்ட்டான டானியல் கிறேக் இறுக்கமான அந்த நீல நிற நீச்சலுடையில் காணப்பட்டபோது பெண் பொன்ட் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருந்ததுடன் அவர் எதிர்வரும் ஓகஸ்டில் வெளிவரவுள்ள திரைப்படத்தில் மீள தோன்றவுள்ளார். எதிர்வரும் செப்டம்பரில் இந்தக் கண்காட்சி முடிவுற்றதும், இந்த காட்சிப்படுத்தப்பப்படலமானது சர்வதேச மட்டத்தில் உலா வரப் போகின்றதாம். ஒஸ்கார் விருது பெற்ற ஆடையலங்கார பெண் வடிவமைப்பாளரான லிண்டி ஹெமிங் இது குறித்து தெரிவிக்கையில், திரைப்படத்தில் வரும் வடிவமைப்புடன் தொடர்பு பட்டதாகவே இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. வருடக் கணக்காக நாம் இத்தகைய ""ஜேம்ஸ் பொன்ட்'' திரைப்பட நடிகர் நடிகையர் பாவித்த ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் கலையம்சம் பொருந்திய ஏனைய படைப்புக்களைத் தாங்கிவரும் படக் காட்சிகளைச் சேகரித்து வந்துள்ளோம்.
ஜேம்ஸ் பொன்ட் திரைப்படமொன்றில் நீங்களும் இணைந்து கொண்டதற்கானதோர் உணர்வை இந்தக் கலையம்சங்கள் உங்களுக்குத் தந்துவிடும் வகையில் உள்ளன என்றே கூற வேண்டும் என்றார். பெரும் எண்ணிக்கையிலான பொன்ட் திரைப்பட வில்லன் மாக் பற்றிய படங்களும் கண்காட்சியை களைகட்ட வைப்பதுடன் நடிகர் ஸ்கராமங்கள் பாவித்திருந்த பொன்னிறத் துப்பாக்கி, தொப்பி ''From Russia with Love' திரைப்படத்தில் நடிகர் ரோசா கிளைப் பாவித்த சுருக்குக் கத்தி கொண்ட சப்பாத்துக்கள் பற்றிய காட்சிப்படங்களும் இவற்றிலடங்குகின்றன. ஆயினும் இந்த அரிய கண்காட்சியானது M 16 துப்பறியும் நிபுணரான ஜேம்ஸ் பொன் திரைப்படக் கலையம்சங்களுக்கு அப்பால் அதன் சிருஷ்டிக் கர்த்தாவான இயன் பிளெமிங் (Ian Fleming) தனது சொந்த அனுபவங்கள் அறிவு மற்றும் நண்பர்களை அடிப்படையாக வைத்து பற்பல கதைகளைத் தழுவி பாத்திரப் படைப்புக்களை உருவாக்கிய விதம் குறித்த விளக்கப் படங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, July 15, 2012

வாய்ப்புகளை தவற விட்ட ஜேம்ஸ் பொன்ட் நடிகர்கள்

துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ் பொன்ட் (James Bond)பாத்திரத்தை கடந்த 1967 இல்ஏற்று நடிப்பதற்கென பிரபல நடிகர்களான ஜோர்ஜ் லேசன்பி, (George Lazenby), ஜோன் ரிச்சாட்சன் (John Richardson), ஹான்ஸ் டீ வீரைஸ் (Hans De Vries), அந்தோனி ரோஜர்ஸ் (Anthony Rogers) மற்றும் ரொபர்ட் கம்பெல் (Robert Campbell) ஆகியோர் ரொம்ப பிரயத்தனப்பட்ட போதிலும் அவர்களால் தங்கள் பேராவல்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் போய் விட்டதென்றே கூற வேண்டும். இவர்களில் அவுஸ்திரேலிய நடிகர் பேஸென்பியால் ஜேம்ஸ் பொன்ட் பாத்திரத்தை இறுதியாக நிலை நிறுத்த நடிக்க முடிந்த போதிலும் அவரால் நடிக்கப்பட்ட ஒரேயொரு "பொன்ட்' பாத்திரமாகவே அது அமைந்திருந்ததெனலாம். பிரித்தானிய துப்பறியும் நிபுணர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்ற ஜேம்ஸ் பொன்ட் ஆகவும் அவர் விளங்கினார். சீன் கொனரி (Sean Connery) பியேர்ஸ் புரொஸ்னன் (Pierce Brosnan) மற்றும் ரோஜர் மூர் (Roger Moore) ஆகிய நடிகர்கள் "ஜேம்ஸ் பொன்ட்' ஆக அபாரமாக நடித்தமைக்காக, இரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கப் போகும் அதேவேளையில், 007 ஆக பாத்திரமேற்று நடிக்கும் வாய்ப்புக்களை மயிரிழையில் நழுவ விட்டோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆமாம்! எதனையும் நிதானித்து தேவையறிந்து அளவாக, மெதுவாகப் பேசும் அந்த அற்புதமான பாத்திரத்தை (துப்பறியும் நிபுணர்) ஏற்று தொடர்ந்து நடிக்கும் அரிய வாய்ப்புகளைத் தவறவிட்ட நடிகர்களின் புகைப்படங்களை ஆவணக் காப்பகமொன்று வெளியிட்டுள்ளது. கடந்த 1967 தொடக்கம் ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் நடித்திருந்த ஐந்து நடிகர்களின் புகைப்படங்களே அவை.
"One Her Majesty Seeret Service" " எனும் திரைப்படத்திற்கான "ஜேம்ஸ் பொன்ட்' பாத்திரத்தை ஏற்றி நடிக்கும் வாய்ப்பு இறுதியாக நடிகர் ஜோர்ஜ் லேஸென்பியைச் சென்றடைந்தது. நடிகர் "சீன் கொனரியை' அடுத்து ஜேம்ஸ் பொன்ட் ஆக நடிக்க வந்த அவுஸ்திரேலிய நடிகரான அவரின் துப்புத் துலக்கும் சாதனை பற்றிய வரலாறு வேறுபாடானதாக அமைந்திருக்கலாம். எவ்வாறாயினும் "ஜேம்ஸ் பொன்ட்' பாத்திரத்தை ஏற்று நடிக்க விரும்பியிருந்த ஏனைய நால்வரில் ஒருவர் தனது பேராவலைப் பூர்த்தி செய்திருந்தால். அவரது வரலாறு வேறு விதமாக மாறியிருந்திருக்கும் என்பதில் ஐயமேயில்லை. கடந்த 1967 இல் ""Life" " எனும் ஆங்கில சஞ்சிகைக்கென எடுக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பொன்ட் பாத்திரத்தில் நடிக்க விரும்பியிருந்த இந்த நடிகர்களின் புகைப்படங்கள் பொருத்தமான வகையில் எடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். அவற்றில் அவர்கள் ஆயுதங்காட்டிப் பயமுறுத்துவது போலவும் மார்டினியை (Martini) உறிஞ்சிக் குடிப்பது போலவும், கவர்ச்சி காட்டும் கன்னியரை, வேறொருவராலுமே செய்ய முடியாத வகையில் வசீகரித்து தனது வலையில் வீழ்த்துவது போலவும் காணப்படுவது சிறப்பம்சமாகும். ஒரு புகைப்படத்தில் பிரித்தானிய நடிகரான ஜோன் ரிச்சாட்சன் தனது சக நடிகையொருத்தியின் துப்பாக்கிக்கு எதிரே தனது முகத்தைத் திருப்பியபடி தோன்றுகின்றார். கண்ணைக் கவரும் ஏனைய புகைப்படங்கள் வரிசையில் நம்பிக்கை தரும் வகையில் ஜேம்ஸ் பொன்ட் ஆக நடித்திருந்த அந்தோனி ரோகர்ஸ் தனது காதல் உணர்வை வெளிப்படுத்தும் புகைப்படமும் அடுத்த நடிகரான ரொபர்ட் காம்பெல் தனது சக நடிகையொருத்தியுடனான முத்தக் காட்சியொன்றில் கலக்குக் கலக்குகின்றார். இறுதியாக ஜேம்ஸ் பொன்ட் ஆக நடிக்கும் தனது ஆவலைப் பூர்த்தி செய்யத் தவறியவராக நடிகர் ஹான்ஸ் டீ வீரைஸ் விளங்குகின்றார்.
தனது முப்பதுகளின் நடுப் பகுதியில் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் அனுபவம் பெற்றிருந்த பிரித்தானிய நடிகர் ரிச்சாட்சனே, ஜேம்ஸ் பொன்ட் பாத்திரமேற்று நடிக்கவென்றே பேராவல் கொண்டிருந்த ஜோர்ஸ் லேசன்பியின் பிரதான வில்லனாக இருந்தாரெனலாம். ஆயினும் அந்த வாய்ப்பை அவர் மயிரிழையில் தவறவிட்டார். தற்போது 78 வயதானவராக இருக்கும் கடந்த 1994 வரை நீடித்த தனது ஏனைய டசின் கணக்கான திரைப்பட வாய்ப்புக்களால் "ஜேம்ஸ் பொன்ட்' ஆக நடிக்கும் ஆசைக்கு முழுக்குப் போட்டு விட்டிருந்தார். ஆயினும் ரோஜர் மற்றும் கம்பெல் ஆகியோரைப் பொறுத்தவரையில் இதே காரணத்தைக் கூறி விட முடியாது.Doctor Who, , அதன் பின்னர் 1986 இல்El Dorado ஆகிய படங்களில் ரோஜர் மீண்டும் நடித்திருந்தார். "ஜேம்ஸ் பொன்ட்' நடிப்பாற்றல் தேர்வைத் தவறவிட்ட பின்னர் அவர் திரைப்பட நடிப்புத் துறைக்கு ஒரேயடியாகவே முழுக்குப் போட்டார். அதே வேளையில் நடிகர் ரொபர்ட் கம்பெலின் நற்சாட்சிப் பத்திரங்கள் பற்றி தொலைக்காட்சி நடிகரான அவரது சகோதரன் வில்லியம் கம்பெல் உடனான உறவு தவிர்ந்த எந்தத் தகவலுமே கிடைக்காத நிலையில் அவர் என்றும் புரியாத புதிராகவே (புதிரான மனிதனாகவே) திகழ்கின்றார். "ஜேம்ஸ் பொன்ட்' பாத்திரத்தில் தோன்றிய ஹான்ஸ் டீ வீரைஸ், You only live twice எனும் திரைப்படத்தில் திறமையற்ற கட்டுப்பாட்டறை தொழில்நுட்பவியலாளராகவும் ஏலவே நடித்துள்ளார். அதன் பின்னர் நடிகர் ஜோர்ஜ் லேசன்பியின் அபார நடிப்பாற்றலால், அவரும் தேர்வில் பின் தள்ளப்பட்டார். சண்டைக் காட்சியொன்றுக்கான திரைப் பரீட்சையொன்றில் இயக்குனரின் இதயத்தில் இடம்பிடித்த லேசன்பி "On Her Majesty's Secret Service" " திரைப்பட ஜேம்ஸ் பொன்ட் (007) ஆக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இறுதியில் நடிகர்களின் திறமைகளைக் கண்டறியும் பூர்வாங்கப் பரீட்சையில் அவரும் நீக்கப்பட்டார். மெட்ரோநியூஸ் 13/07/12

Tuesday, May 29, 2012

அட்டைப் படத்தில் அழகு காட்டும் மொடல் அழகி

கடந்த பதினைந்து வருடங்களாக முன்னர் மொடல் அழகியரில் ஒருவராக உலக வலம் வந்து இரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்கிய கிசெல் பன்ட்சன் பிரான்ஸிலிருந்து வெளிவரும் ""வோக் பாரிஸ்'' "Vouge Paris சஞ்சிகையின் அட்டைப் படத்தில் ஆபாசத் தோற்றம் காட்டுகின்றார். அந்த காலத்தில் வசீகரிக்கும் வண்ணம் பிரபல மொடல் அழகியாக இருந்த அவர், அவற்றைக் குறைக்கும் அறிகுறிகளெதுவும் தென்படாத நிலையில் அதற்கு மாறõக விரைவில் வெளிவரவுள்ள மேற்படி சஞ்சிகையின் அட்øப் படத்தில் திறந்த நிலையில் காணப்படும் தனது மெழுகு போன்ற மார்பகங்களை அப்படியே துணிந்து காட்டியுள்ளார். பிரேஸில் நாட்டைத் தாயமாகமாக் கொண்ட முப்பதொரு வயதான "கி செல்' கடற்கரையில் நின்றவாறு கறுத்த நீண்ட காற்சட்டைகள் அணிந்து நிலையில் விளையாட்டுக் காட்டுவது போன்று அரை நிர்வாணக் கோலத்தில் அழகு காட்டினார். அவரது அடிப்பாகம் மணலில் மறந்திருக்க தனது வனப்பு மிகு மேனியின் நெளிவு சுழிவுகளைக் காட்டுவதில் அவர் கூடிய கவனஞ் செலுத்தத் தவறவில்லை. தனது நிமிர்ந்த தோளுக்கு மேல் நிறந்தீட்டப்பட்ட கூந்தல் சுகந்தம் வீசும் அந்த இனிய தென்றல் காற் றில் அலைபாய தலையைதிருப்பியபடி அவர் தனது உதட்டைப் பிதுக்கியவாறுபோஸ் கொடுத்துள்ளார். இந்த அரியதோர் காட்சிøய தங்கள் கமராவுக்குள் சிறைப்படத்திய கலைஞர்கள் வேறு யாருமல்ல. புøகப்படக் கலை ஜாம்பவான் இனெஸ் வான் லாம்பு வீர்ட் மற்றும் விநோத் மடடாடின் ஆகியோரே அவர்களாவர். பிரபல பிரெஞ்சு நவநாகரிக சஞ்சிகையான "வோக் பாரிஸ்'ஜூன், ஜூலை இருமாதிரி இதழுக்காகவே அவர் இவ்வாறு போஸ் கொடுத்துள்ளார். சாவோ போலோவில் அமைந்துள்ள கொருள்ஹொஸ் சர்வதேச விமான நிலையத்தை கடந்த வாரம் வந்தடைந்த பிள்ளை ஒன்றுக்குத் தாயான அப்பர் மொடல் அழகியான கிசெல் பின்னர் புதியதோர்உள்ளாடை விற்பனையகத் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கென அங்கிருந்து கிளம்பினார். தான் பிறந்த மண்ணின் மொடல் அழகியாக வலம் வந்திருந்த கிசெல் விரைவாக முன்னேறி இன்று சுப்பர் மொடல் அழகியாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஆபாசம் காட்டும் செயலாளராக கறுத்த லேஸ் வைத்த மேற்சட்டையுடனும் கற்றையுடை பாவாடையுடனும் கண்கவர் பாதணியுடனும் காட்சியளித்திருந்தார் நள்ளிரவில் மாதர் அணியம் ஆபாச மார்புக் கச்சை அணிந்து காணப்பட்ட கிசெல் கமராவுக்கு முன்னால் தலைநிமிர்ந்து கவர்ச்சி காட்டியுள்ளர். தற்போது சுறுசுறுப்பாகக் காணப்படும் அழகி கிசெல் நியூஸிலாந்தின் தேசாபிமானியான டொம்பிராடி (Tom Brady)) யைத் திருமணம் செய்து ஒரு குழந்தைக்குத் தாயான நிலையிலும் தனது புதிய ஒப்பந்தங்களை அவர் வேர்சேஸ் பிரேஸில் வங்கி மற்றும் சல்டேடர் ஃபெராகமமோ ஆகிய நிறுவனங்களுடன் இந்த வருடத்திற்கு மட்டும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது திறந்த மார்பகங்களை அப்படியே காட்டிடும் பிரெஞ்சு நவநாகரிக ""வோக் பாரிஸ்'' சஞ்சிகையில் வெளியானது.. மெட்ரோநியூஸ்25/05/12

Friday, May 25, 2012

இப்போதைக்கு திருமணம் இல்லை

ஹொலிவூட் திரைப்பட உலகின் பிரபல பாடகி கதே பெரி ((Katie Price) தனக்கென நிச்சயிக்கப்பட்டுள்ள புதிய கணவரான லீன்ட்டோ பென்னா (Leando Penna) வின் பிரசன்னம் இல்லாத நிலையில் லாஸ் வெகாஸ் (Las Vegas) நகரை கடந்த வாரம் சென்றடைந்தார். ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் தனது நண்பரானடானியல் லொய்ட்ஸ் அளித்திருந்த இராப்போசன விருந்தின் போது அவர் குழப்பம் விளைவித்திருந்ததாக செய்திகள் வெளி வந்திருந்தன. கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமான முறையில் அலெக்ஸ் ரெய்ட் ( (Alex Raid) உடனான தனது திருமணம் எங்கு நடைபெற்றதோ அதேஇடத்திற்கே அதாவது லாஸ் வெகாஸ் நகருக்கே அவர் பைத்தியக்காரி போன்று சென்றுள்ளார். எவ்வாறாயினும் அவரது கணவராக புதிதாக நிச்சயிக்கப்பட்டுள்ள லீன்ட் டோ பென்னா அவருடன் கூடச் செல்லாதிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே மூன்று பிள்ளைகளுக்குத் தயாரான அவர் வழமைக்கு மாறான முறையில் சிவப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை நிற நீண்ட காற்சட்டையுடனும் நாகரிகமான துணிகள் மற்றும் பல்வகை நாகரிகப் பொருட்களை விற்பனை செய்து வரும் செலிப் பூட்டிக் ( Celeb boutigue) இல் வாங்கப்பட்ட தோலினால் தயாரிக்கப்பட்ட தொரு பாவாடையும் முப்பத்து மூன்று வயதான பெரிஸ். வெகாஸ் நகரில் அமைந்துள்ள மக்கரன் சர்வதேச விமான நிலையத்திலிருச்து (Mc carran International Airport) தனது லூயிஸ் வுய்ட்டன் (Louis Vuition) பயணப் பொதியுடன் வெளியேறக் காணப்பட்டார். அவரது கமரா குழுவும் அவருடன் கூடவே சென்றுள்ளது. மெட்ரோநியூஸ்25/05/12

Sunday, May 20, 2012

கோடைகால வெப்பத்தை தணிக்க்கும் மார்புக்குளிரூட்டி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தக் கோடைக்காலத்தில் பெண்களுக்கு இதமளிக்கும் வகையில் உள்ளாடையொன்று தயாரிக்கப்பட்டு, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைசிறந்த உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான "ட்ளம்ப்' நிறுவனத் தயாரிப்பான ""Super Cool Bra'' (அதிசிறந்த குளிர்ச்சிதரும் மார்புக்கச்சை) தலைநகர் டோக்கியோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அற்புதமான குளிர்ச்சி தரும் மார்புக்கச்சில் ஜெல்மெத்தைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஜெல் மெத்தைகளை[ Gel pads ]குளிரூட்டியில் இரண்டு மணி நேரம் வைத்த பின்னர், பெண்கள் தங்களின் மார்பகங்களுக்குள் செலுத்தியவுடன் அவர்கள் இது கோடை காலம் என்பதையே மறந்து விடுவார்களாம். அந்தளவுக்கு அதி நவீனமான முறையில் இந்த மார்புக்கச்சு (Brassiere] தயாரிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் வேறுபட்ட வகையில் மகளிரின் மார்பகங்களைக் குளிரச்செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மார்புச் கச்சு இரண்டு வேறுபட்ட கண்கவர் வர்ணங்களில் வெளிவந்துள்ளதுடன், புதினா கீரை வாசம் கலந்த புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் வழங்கும் சிறிதளவிலான காற்றோசை கொண்டதாகவும் காணப்படுவதாக இதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிசய மார்புக்கச்சின் இரண்டு கிண்ணங்களும், மீனொன்றுக்கும் கடல்தாவரக் கோலத்திற்கும் பின்னால் நீல நிறமுடைய ஜெல் மெத்தைகள் கொண்ட மீன் வளர்ப்புக்கிண்ணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இத்தகைய குளிரூட்டும் ஜெல்மெத்தைகள் தமது வித்தைகளைக் காண்பிக்க வில்லையெனில், இதனை அணிந்துகொள்வோர், தங்கள் மேனியில் நீரைத் தெளித்துக்கொள்ளும் வகையில் மார்பு கச்சில் அமைக்கப்பட்டுள்ள சிறியளவு மூங்கிலால் செய்யப்பட்ட குழிவுள்ள கரண்டியை அல்லது கைவிசிறியைத் தெரிவு செய்து பாவித்துக்கொள்ளலாம். மொடல் அழகிகளால் செய்துகாட்டியது. இதற்கு முன்னர் எப்போதுமே செய்யப்பட்டிருந்ததை மூங்கில் திரைகொண்டதும், நுளம்பு வலை கொண்டதுமான குட்டைப் பாவாடையுடன் பெண்கள் தங்கள் மேனியின் அரைவாசிப் பகுதிவரை இதனைப் பாவிப்பதன் மூலம் குளிர்ச்சியை அனுபவித்தும் கொள்ளலாம். ஆயினும், இத்தகைய அதிசய மார்புக்கச்சு விற்பனைக்கு விடப்படப் போவதில்லையெனவும் ஜப்பானில் குளிரூட்டிச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டே இவை தயாரிக்கப்டடுள்ளதாக, உள்ளாடைகள் தயாரிப்பு ஜாம்பவனாகத் திகழ்ந்து வரும் ட்ராய்ம்ப் ( Triamph International) நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் கடந்த வருடம் மார்ச் மாதம் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை அனர்த்தத்தை தொடர்ந்து நாடு ஏராளமான மின்சக்தி பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. ""ட்ராய்ம்ப்'' நிறுவன பேச்சாளரான யொஷிகோ மசுடா இதுகுறித்து தெரிவிக்கையில், முழு நாடும் குறிப்பாக "கன்சாய்' ((Kansai) பிராந்தியம் மின்சாரத் தட்டுப்பாட்டால் அவதிப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனங்களும், நாட்டு மக்களும் தற்போது இல்லையென்றளவுக்கு அதிகூடிய மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் மின்சார சேமிப்பை ஊக்குவிக்க வே நாம் இதனை அறிமுகம் செய்திருக்கிறோம் என்றார். ""ட்ராய்ம்ப் இன்டநெஷனல்'' ( Trlumph International) நிறுவனமானது ஜேர்மனியில் கடந்த 1886இல் ஸ்பைஷோபர் புரோபன் ஆகிய இரு குடும்பங்களால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச உள்ளாடைகள் உற்பத்தி நிறுவனமாகும். சுவிற்ஸர்லாந்தின் ஸர்ஸாக் ((Zurzach) நகரில் இயங்கி வரும் அதன் முதலாவது வெளிநாட்டு துணை நிறுவனமே தற்போது அதன் தலைமையகமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது 120 நாடுகளில் செயற்பட்டு வரும் இந்த மாபெரும் நிறுவனம், உலகின் உள்ளாடை உற்பத்தி முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இந்நிறுவனம் 2.2 பில்லியன் சுவிஸ் பிராங்கை வருடாந்த வருமானமாகப் பெற்று வருவதுடன் உலகளாவிய ரீதியில் 36,500 பணியாளர்களையும் கொண்டு வீறுநடை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மெட்ரோநியூஸ் 13/05/12

Sunday, May 13, 2012

தலை கீழாக நிர்மாணிக்கப்பட்ட அதிசய‌ சுற்றுலா விடுதி

எமது சமூகத்தில் வீடொன்றைக் கட்டுவதெனில் நாம் படும் பாடு குறித்து சொல்லவே தேவையில்லை. தரையில் அடித்தளம் இடுதல் தொடக்கம் கூரைபோடுவது வரையிலான நிர்மாண வேலைகளுக்கு நாம் அதிகளவு பணத்தைச் செலவிடும் அதேநேரம் மனித சக்தியையும் அதிகம் செலவிட நேரிடும். பலதரப்பட்ட கட்டிட நிர்மாணத் தொழிநுட்பத்துடன் கூடிய அபூர்வமான சுற்றுலா விடுதியொன்று ஐரோப்பிய நாடான அவுஸ்திரியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் என்னதான் ஆச்சரியம் என்கிறீர்களா? ஆமாம்! காரொன்று நிறுத்தப்பட்டுள்ள கராஜ் ஒன்றைக் கூட தனது முகட்டில் கொண்டு தலை கீழான நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன சுற்றுலா விடுதியில் பயணிகள் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. மேலோட்டமாக இதனை நாம் பார்க்கும் போதும் இந்த சுற்றுலா விடுதியானது அமானுஷ்ய பலம் வாய்ந்த ”ழற்காற்றினால் வேருடன் பிடுங்கி எறியப்பட்டு அதன் கூரையில் நாட்டப்பட்டுள்ள ஒன்றாகவே காட்சியளிக்கின்றது. விநோதமான முறையில் இந்த வீடு இவ்வாறு தான் கட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பிரதான கட்டடக்கலைஞர்களான ஐரெக் குளோவக்கி மற்றும் ரொஸான்ஸ்கி ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான வீட்டின் வெளிப்புறத்தில் உள்ளவாறு உள்ளேயும் அனைத்து தளபாட உபகரண வசதிகள் நிறைந்ததாகவே அதாவது தலைகீழான நிலையில் கராஜ் ஒன்றினுள் காரொன்று நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய தளபாட வசதிகளும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரியாவின் இன்ஸ்புரு நகருக்கு 15 மைல்கள் மேற்கே அமைந்துள்ள டேர்ஸன்ஸ் நகரத்திற்கான இத்தகைய தலைகீழாகக் காட்சி அளிக்கும் சுற்றுலா விடுதியை உருவாக்கித் தருமாறு மேற்குறித்த கட்டிடக் கலைஞர்கள் இருவரும் வேண்டப்பட்டிருந்தனராம். போலந்து நாட்டைச் சேர்ந்த இந்த அமானுஷிய கட்டிடக் கலைஞர்கள் இருவருக்கும் இந்த விடுதிக்கான விபரங்கள் அடங்கிய வீட்டுத் திட்டத்தை வடிவமைக்க மட்டும் எட்டு மாதங்கள் எடுத்துள்ளது. வானத்தில் தலைகீழாகத் தொங்கும் தடை செய்யப்பட்டுள்ள தலைவாசலில் விருந்தினர்கள் பொழுது போக்குக்கென நடைபயிலலாம் என்பதுடன் மேல் மாடி சாளரத்தின் ஊடாகவே அவர்கள் உள்ளே நுழையுமாறு வரவழைக்கப்படுகின்றனர். கூரை இருக்கவேண்டிய அடித்தளங்களையும் தளமொன்றின் எஞ்சிய பாகங்களையும் தொலைவில் இருந்துக் கூடஉங்களால் பார்க்க முடியும்.
உள்ளே வருகை தரும் விருந்தினர்கள் முகட்டிலிருந்து தலைகீழாக தொங்கும் மரச்சாமான்களுடனான குளியலறையொன்றை உற்றுப் பார்த்த வண்ணமேயிருப்பர். அத்துடன் இந்த அபூர்வ சுற்றுலா விடுதியின் தலைகீழான நிலையின் அறுவடையைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள புவியீர்ப்பு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த ஆச்சரியம் தரும் கராஜையும் நீங்கள் தரிசிக்கலாம். சிறுவர்களுக்கான படுக்கையறைகள் கூட முகட்டில் விளையாட்டுச் சாமான்கள் பரவிய நிலையில் நிஜரூபம் வாய்ந்தவையாகவே காணப்படுகின்றன. இவை மட்டுமா என்ன? இயங்கு நிலையில் உள்ள மின் அடுப்பொன்று, குளிர்ச்சாதனப்பெட்டி உள்ளிட்ட எடுப்பான தோற்றங்கொண்ட சமையலறை ஒன்றும் இந்த விடுதியில் காட்சியளிக்கின்றது. அத்துடன் வரவேற்பு மண்டபத்தில் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றும், நிலத்தை நோக்கிய புகை போக்கியுமுள்ளன. இந்தத் தலை கீழான சுற்றுலா விடுதி விருந்தினர்களுக்கென இந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் வருகை தருவோரைக் கவரும் விதத்தில் அனை த்து அடிப்படை வசதிகளும் தலைகீழாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிசய விடுதியை பிராந்தியத்தில் உள்ள அனை வரும் அலைகடலென திரண்டு வந்து பார்த்த வண்ணமுள்ளனர். மெட்ரோநியூஸ் 06/05/12

Saturday, May 12, 2012

சர்ச்சையில்சிக்கிய மொடல்

ஹொலிவூட் திரைப்பட உலகில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையும் வடிவமைப்பாளருமான கிம் கர்டாஷியனின் முன்னாள் காதலரான நடிகர் ரேய் ஜே அவுஸ்திரேலிய பிரபல நடிகை சோபிக் மொங் (sophie mong ) குடன், சுகந்தம் வீசும் புதிய வர்த்தகப் பொருள் விற்பனை ஊக்குவிப்புக்கான படப்பிடிப்பொன்றில் மிகவும் நெருங்கிய நிலையில் தோன்றியுள்ளார். பிரின்ஸ் ரெய்ன்ஸ்[ prince reigns ) எனும் வர்த்தக நாமங்கொண்ட சவரம் செய்வதற்குப் பாவிக்கப்படும் திரவகமொன்றிற்கான (shaving serum) விற்பனை ஊக்குவிப்பு சம்பந்தமான விளம்பர படப்பிடிப்பின்போது 31 வயதான நடிகர் ரேய் ஜே (rayj) காண்போரை ஒரு கணம் கிறங்க வைக்கும் திறந்த மார்பகங்களைக் கொண்ட 32 வயதான அவுஸ்திரேலிய நடிகையான சோம்பி மங் (sophie monk) மீது ரோஜாப் பூவிதழ்களைத் தூவிய நிலையில் அவர்கள் இருவரும் நீர்த்தடாகமொன்றில் ஒன்று சேர்ந்து குதித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்தனர். மேற்படி வர்த்தக நாமத்தின் புதிய முகங்களாக அவர்களிருவரும் விளங்குவதற்கென அவர்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பேரழகி கிம்மின் வசைப் பெயர் பெற்றுள்ள ஆபாச ஒளிநாடாக்களில் தோன்றி நடித்துப் பிரபல்யமடைந்துள்ள நடிகர் ரேய் ஜே ஹொலிவூட் திரையுலக பிரபல பாடகியாகத் திகழ்ந்து கடந்த பெப்ரவரி 11 அன்று பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் குளியல் தொட்டியொன்றில் இறந்த நிலையில் காணப்பட்டிருந்த விட்னி ஹுஸ்டனுடன் நெருங்கிய உறவை வைத்திருந்து பின்னர் அதனை உதறித்தள்ளியமையும் அனைவரும் அறிந்த விடயம்.
மேற்படி சவரம் செய்ய பயன்படும்prince reigns எனும் திரவபாக விற்பனை ஊக்குவிப்புக்கான விளம்பரப் படப்பிடிப்பு நடிகர் ரேய் ஜேயின் வீட்டில் இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்ததுடன் அங்கு நடிகை சோபியின் பிரசன்னம் பற்றி ஆரம்பத்தில் அவர்கள் இருவரையும் பற்றிப் கிசு கிசுப்பு வதந்தியாகவே பரவியதாம். இது குறித்து நடிகை "குளோபல் கிறின்ட்' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது விட்னி ஹுஸ்டனின் முன்னாள் காதலரின் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டாயா? என எனது தாயார் அவுஸ்திரேலியாவிலி ருந்து. காலை 8.30 மணியளவில் கேட்ட போதுதான் நான் அமெரிக்காவில் இருந்ததை உணர்ந்தேன். ஆயினும், உண்மையைச் சொல்வதாயின் நான் ரேய் ஜேய் ஜே யின் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாகக் கூறினேன். ஆயினும் அங்கு prince reigns க்கான புதிய விற்பனை ஊக்குவிப்பு மொடலிங் ஒன்றுக்காகவே நான் உண்மையில் நான் அங்கிருந்தேன். கடந்த வருடம் தீவிரமாக உடலின்பம் தேடுதல் பற்றிய சஞ்சிகையின் அட்டைப் படம் மற்றும் உள்ளே இருக்கும் படங்களுக்கான நிர்வாணக் கோலங்காட்டவென ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க அச்சஞ்சிகை வெளியீட்டாளர்கள் முன்வந்த போதிலும் அதனை நடிகை சோப்பி நிராகரித்திருந்ததுடன் இத்தகைய செயலானது ஹொலிவூட் திரையுலகத்தில் தடம் பதிக்கும் தனது சந்தர்ப்பங்களை இல்லாமற் செய்துவிடுமெனவும் கூறியிருந்தார். கிளிக் ((click) மற்றும் டேற்மூவி (date movie) ஆகிய நகைச்சுவைப் படங்களில் பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்த நடிகை மொங் good charlotte திரைப்பட நடிகர் பென்ஜி மடெனுடன் (benji madden) இதற்கு முன்னர் திருமணப்பதிவு செய்து கொண்டார். கடந்த 2010ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோன் டயஸுடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆயினும், சத்திர சிகிச்சை நிபுணர் வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை நேரில் பார்த்து அவர் தனது கணவரை விவாகரத்துச் செய்தார். அதனையடுத்து கடந்த அமெரிக்க கோடீஸ்வரரான ஜிம்மி எஸ்பக்குடனான (jimmy Esebag) குறுகிய காலத் திருமண நிச்சயதார்த்தத்திற்கும் சோம்பி முற்றுப்புள்ளி வைத்தமை குறிப்பிடத்தக்கது. மெட்ரோநியூஸ் 12/05/12