Thursday, November 3, 2011

700 ஆவது கோடி குழந்தைபிலிப்பைன்ஸில் பிறந்தது

.
உலகின் மொத்த ஜனத் தொகை நேற்றுடன் எழுநூறு கோடியாகியது.நேற்று பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவமனையொன்றில் பிறந்த டானிகா மே காமாச்சோ எனும் பெயருடைய பெண் குழந்தை பிறந்ததன் மூலம் உலகின் ஜனத்தொகை 700 கோடியானது.
தனது தலையின் மூலம் வெப்பம் வெளியேறாவண்ணம் தொப்பியொன்றை அணிந்து காணப்படும் டானிக்காவை அவளது பெருமைக்குரிய பெற்றோர் பார்த்து ஆனந்தப்படுகையில் அவளோ தனது சின்னஞ்சிறு கைகளால் தாயõரின் உடலை அணைத்த படி படுக்கையில் கிடக்கின்றாள்.
தாயாரான காமலேக்கும் தந்தையாரான புளோரன்ரேக்கும் அவளது இந்தப் பிறப்பு முக்கியமானது மட்டுமின்றி உலகில் பிறந்துள்ள எழுநூறாவது கோடியை அடையாளப்படுத்தும் வகையில் பிறந்துள்ள குழந்தைகளில் டானிகாவும் ஒருவராகி உள்ளமை அவர்களைக் குதூகலிக்க வைத்துள்ளது.
இந்த உலகில் அதிகூடிய சனத்தொகை கொண்ட நாடுகளில் பன்னிரண்டாவது நாடாக விளங்கிவரும் பிலிப்பைன்ஸ் உலகின் ஏனைய நாடுகளுடன் இøணந்து கொண்டாடும் முகமாக குறித்த மருத்துவமனையில் எழுநூறாவது கோடியை அடையாளப்டுத்தும் வகையில் பிறந்துள்ள டானிகாவை வரவேற்றிட எளிய முறையில் வைபவமொன்றையே நடாத்தியுள்மை குறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவு தொடங்குவற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் இந்த உலகிற்கு எழுநூறாவது கோடியைக் குறிக்கும் அடையாளச் சின்னமாக புதிய வரவாக வந்துதித்த டானிக்காவுக்கு தலைநகர் மணிலாவில் உள்ள ஜோஸ் பெல்லா ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுஅவளின் பிரசவம் கூட வழமைக்கு மாறான விதத்தில் நிகழ்ந்திருப்பதும் சுவாரஸ்யம்தான். ஆமாம் பிரசவ அறைக்கும் வெகுஜன ஊடகங்களின் கமெராக்களின் ஒளி தெறிக்கும் மின் குமிழ்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும்போதே ஐந்து இறாத்தல் ஐந்து அவுன்ஸ் எடையுள்ளவளாக டானிக்கா பிறந்ததாள். இந்த வரலாற்றுப் பிரசவம் பற்றி அவளது தாயாரான காமிலோ தாலுரா கூறுகையில்,
""அவள் அழகாகக் காணப்படுகின்றாள். இந்த உலகின் எழுநூறாவது கோடி குழந்தையாக அவள் பிறந்துள்ளாள் என்பதனை என்னால் நம்ப முடியாதுள்ளது'' என்றார்.
டானிக்கா புளோறன்ரே காமிலே தம்பதியரின் இரண்டாவது குழந்தையாவார். தொலைக்காட்சி குழுவினர் மற்றும் படப்பிடிப்பிப்பாளர்கள் புடை சூழ அந்தப் பிரசவ அறையின் மூலை ஒன்றில் வெள்ளை நிற மருத்துவமனை ஊழியர்கள் அணியும்மேலங்கியுடன் புளோறன்ரே காணப்பட்டார்.
அத்துடன் பிலிப்பைன்ஸில் கடமையாற்றிவரும் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் இந்த வரலாறு படைத்த அன்புப் பெற்றோருக்கும் குழந்தை டானிக்காவுக்கும்சிறிய கேக்(Cake) ஒன்றை அன்பளிப்புச் செய்தனர். இது மட்டுமா? பிலிப்பைன்ஸில் உள்ள நன்மை பயப்பவர்களால் டானிக்காவின் எதிர்காலக் கல்விக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் அவளது பெற்றோர் பொதுக் களஞ்சியசாலையொன்றை ஆரம்பிக்கவென வாழ்வாதாரப் பணப்பொதி ஒன்று உள்ளிட்ட பல அன்பளிப்புகளும் வழங்கப்பட்டுள்ளனவாம்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் கடந்த 1999 இல் அறுநூறாவது கோடி குழந்தையாகப் பிறந்து தற்போது தனது 12 ஆவது வயதில் ஆறாம் தரக் கல்வி பயின்றுவரும் கொரிசே மீ கியவராவும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இது குறித்து கியூவரா கருத்து வெளியிடுகையில்,""இந்த அழகு குட்டித் தேவதையைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவளும் என்னைப் போலவே வளர்ந்து இந்த உலகில் உள்ள அனைவராலும் அன்பு பாராட்டப்படுவாள் என நம்புகின்றேன்'' என்றார்.
இந்த உலகைச் சுற்றியுள்ள நாடுகளில் எழுநூறாவது கோடியை அடையாளப்படுத்தும் வகையில் பிறந்துள்ள குழந்தைகளில் டானிக்காவும் ஒருவராவார்.
அக்டோபர் 31 ஆகிய நேற்றுடன் உலக சனத்தொகை ஏழு பில்லியனை அடைந்துள்ளமையைக் குறிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 31 ஏழு பில்லியன் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்த்ககது.
பிலிப்பைன்ஸின் சுகாதாரச் செயலாளர் என்ரிகியூ ஓனா இது பற்றி தெரிவிக்கையில்,
டானிக்கா சரியாக நள்ளிரவில் தான் பிறப்பாரென நம்பப்படட போதிலும் அவள் நள்ளிரவுக்கு இரண்டு நிமிடங்கள் முந்தியேபிறந்துவிட்டார். குடிசனத் தொகை விவகாரங்களில் பிலிப்பைன்ஸை மற்றைய நாடுகள் மதிப்பிடும் வகையில் டானிக்கா அரிய சந்தர்ப்பமொன்றை எமக்கு வழங்கியுள்ளõரெனவும் கூறினார்.கடந்த நூற்றாண்டில் உலக சனத் தொகை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
மெட்ரோநியூஸ் 01 /11 /11

No comments: