Friday, April 24, 2009

ஏன்மறந்தீர்?

ஏன்மறந்தீர்?
விவாகரத்துக்கு நீதிமன்றம்
ஏறி இறங்கும்தம்பதியரே
உங்கள் சந்தோச உயிர்ப்பான
பிள்ளைகளின் எதிர்காலத்தை
சிந்திக்கவேண்டாமா?
உங்கள் சுயநலம் பெரிதா?
பிள்ளைகள் நல்வாழ்வுபெரிதா?
வஹாப்,கல்பிட்டி


மேலே உள்ளகவிதையின்
சுயநலம் பெரிதா ?
பிள்ளைகள் வாழ்க்கை பெரிதா ? என்ற கேள்விக்கான பதில்கவிதை

காதலித்து கரம்பிடிப்பவர்களே
கடைசி மூச்சு வரை காதலியுங்கள்
சுய நலத்துக்காக வாழ நினைக்கும்
பெற்றோர்களே நீங்கள்
உங்கள் பிள்ளையின் வாழ்வுக்காக
வாழ்ந்து கொள்ளுங்கள்
ஐ. நஸ்ரின்,
நிந்தவூர் 15.
கசத்துப் போன
வாழ்க்கையில் எதற்கு
சுய நலம் எனக்கு
என் தியாகங்களெல்லாம்
அவர்களின் நல்வாழ்வு
பெரிதென்பதற்காக
என். சஹீம்,
அக்கரைப்பற்று
பிள்ளைகள் நல்வாழ்வு
பெரிதென கருதின்
அவர் தாம் புத்திசாலி தம்பதியினர்
ஜெஸீமா அஸீஸ்
அலபடகம
கணவன் மனைவி என்ற
இருதயக் கூண்டின் இடைவெளியில்
பிரிவு எனும் பிணக்கு உதித்த பிறகு
அவர்கள் நலம் பேணுவதே
கேள்வியாக மாறியுள்ளவேளை
அன்புச் செல்வங்கள் பிள்ளைகள்
நலம் பெரிதென எப்படிக் கருதுவார்கள்!
சாலிஹ எம்.றியாழ்,
சுங்காவில்
கல்யாணச் சந்தையிலே இவர்களின் உணர்ச்சிக்கு
மதிப்பளிப்பதில்லை இவர்களின் பெற்÷றார்கள்
அதனால்தான் விவாகரத்து மேடையில் இவர்களின்
குழந்தைகளின் உணர்ச்சிகளுக்கு
மதிப்பளிப்பதில்லை.
இவர்கள் அங்கும் சுய நலம் இங்கும் சுயநலம்
மொத்தத்தில் இந்த உலகிலில்லை பொது நலம்

சுபையில் அஸீஸ்
சாய்ந்தமருது 05
விவாகரத்து பெற்று உன் குழந்தையின்
உறவை ரத்து செய்து
உறவுகள் பிரிந்தபின்
நீ வாழ்ந்து என்ன பயன்?
ஐ.ஹலால்தீன்
அப்புத்தளை
குழந்தைகளின் அன்பை!
மழலை சிரிப்பை மறந்த
தம்பதிகளே! உங்கள் பிரிவால்
வாடுவது ஒன்றும்அறியாத
குழந்தைகள் என்பதை மறக்காதீர்
விவாகரத்தை! நினைக்காதீர்கள்
தன்னைக் கேட்டு பிறக்காத
குழந்தைகளை நாம்
மண்ணைவிட்டு போகும்வரை
பாதுகாப்பதே உண்மையான
தம்பதிகளுக்கு உத்தரவாதம்
கிரேக் ஆர். சிசுபாலன்
பண்டாரவளை
பிள்ளைகளின் நல்வாழ்வு
எதிர்காலம் சந்தோஷம் எல்லாம்
கருத்திற் கொண்டு புரிந்து வாழணும்
இதுவே பெரிதும் நியாயமானது
பாத்திமா பைரோஸா பாஸி,
எஹலியகொடை
நல்ல அம்மாவாக ஏன் அப்பõவாக
மணவாழ்வில் வாழ முடியாத நிலையில்
பிள்ளைகளின் எதிர்காலம் எண்ணியே
விவாகரத்து நீதிமன்றத்தில் நாம்!
அனுஷா ஜெயந்தி,
வத்தேகம
பிள்ளைகளின் நலன்
அவரவர் பெற்றோரின்
சுயநலத்தில் தான் தங்கியுள்ளது.
ப. கனகேஸ்வரன்,
பொகவந்தலாவை
உங்கள் சுயநலத்துக்காக பிரிந்தீர்கள்
உங்கள் வாழ்க்கைக்காக எதை இழந்தீர்
உங்கள் அன்பான பாசப் பயிர்கள்
எங்களை ஏன் மறந்தீர்கள்?
கே. கஜேந்திரன்,
நாவலப்பிட்டி.
முட்கள் நிறைந்த வாழ்வின்
சுயநலம் கருதாது பிள்ளைகள்
எதிர்காலம் எண்ணி வாழ்ந்திடலாம்
ஆனால்.....
அதுவே பிள்ளைகளுக்கு பாதிப்பை தருமாயின் ....
சிந்தித்தால் ...
நலவாழ்வு கலந்த சுயநலம் பெரிது.
ஆ.கீதா,
கடியன்லேன
பிரச்சினைகள்
தொடருமானால் பிள்ளைகளின்
வாழ்வு பாதிக்கப்படும்
எல்லாவற்றுக்கும் தீர்வு
காண்பதற்காகவே
இச் செயற்பாடு
மு.ச. பாத்திமா ஸஹீறா
காத்தான்குடி 04
பிள்ளைகளின் எதிர்காலம்
கருதி தன்னையே
தியாகம் செய்து
தனியாக தன் செல்வங்களைக்
காத்து பராமரிப்பவள்
தாய் ஒருத்தி மட்டுமே
ஜெ. ஷீமா ஹக்,
கண்டி
இருபத்தி ஓராம் நூற்றாண்டு
சமுதாயம் இது பிள்ளைகள்
வளர்ப்பை வாழ்வையெல்லாம்
நினைக்க எங்கே நேரம்
இருக்கு?
ஏ.பி.யூ.எல். முஸ்தபா பஸ்னா
காத்தாகுன்டி 06
நீங்கள் கடந்து வந்த பாதை
முள்ளோ மலரோ எதுவோ
மறந்திடு
உன் செல்வங்கள்
நற் பாதையில் பயணிக்க
உங்கள் கலங்கிய வாழ்க்கைப் பந்தலில்
வளரவிடு வாசனை மல்லிகையை
அலி மூஸா,
நிந்தவூர் 03
ஒரு வேளை உண்ண அவதியுறும்
இவ்வேளை விவாகரத்து நீதிமன்றம்
விபரமறியாமல் ஏறி இறங்கும்
தம்பதியர் மத்தியில்
புரிந்துணர்வும், விட்டுக்கொடுப்பும்
இல்லாமையே முதன்மை காரணம்!
முஹம்மது முகாரம்,
ஏறாவூர்02
சுகமான சுயம் வரம் எனக்கு சிசு வொன்றை தந்தது
என் கணவன் இன்னொருவரின்
துணையாகிப் போனான்
என் நிலை கண்ணீர்க் கதை
அதில் சுயநலம் பெரிதா
பிள்ளையின் சுக வாழ்வு பெரிதா
எதைப் பற்றி சிந்திக்க எனக்கு
என்னையே சுமையாகிப் போனால் வாழ்வே
போராட்டமானால்
நான் என்ன செய்வதறியேன் இந்நாளில்
யூ.எல்.எம். பிர்தௌஸ்,
சாய்ந்தமருது 07
உடன் பிறப்புகளுடன் பிரச்சினை
வரும் போது நீதிமன்றங்களைத் தேடி
ஓடாத சுயநலவாதிகளே
புருஷன் மனைவிக்கிடையில்
சிறு பிரச்சினை வந்தாலும் பிள்ளைகளின்
நல்வாழ்வைக் கருதாமல் நீதிமன்றங்களை
தேடி ஓடுகிறீர்களே உங்களைத்
தூக்கு மேடைக்குத்தான் அனுப்ப வேண்டும்
ஸனூன் ஸரீமா பயாஸ்,
மக்கொன
என்ன சொல்வது அதையும் எப்படிச் சொல்வது
தூக்கத்திலும் வரும் துக்கமாக
மனிதன் நெருப்புத் தணலை விழுங்கும்
கேள்விகளால்
முடிவுரைக்கு மட்டும்தான் நல்ல எதிர்காலங்கள்
பணம் தேடும் பெற்றோர்கள்
மானிட ஜனனத்தை புரியாத வரை
எதிலும் சுயநலம்தான் அவர்களுக்கு சோபனம்!!
யாசீன் பாவா ஹுசைன்,
பொத்துவில்
வீணாக ஏறியிறங்கும் தம்பதியரே....
உங்கள் பிள்ளைகளின் நலம் பேணுங்கள்!
உங்கள் சுய நலம் வேண்டாம்?
உங்கள் வாழ்க்கையும் வீணாக்கிவிடும்!
எம்.எஸ்.எம். முலௌபர்
வெல்லம்பிட்டி

No comments: