Monday, January 19, 2009

ஒபாமாவை முந்தினார் சத்யம் ராஜு


இந்தியர்கள் கடந்த சில நாட்களில் இன்டர்நெட்டில் அதிகம் தேடிய நபர் யார் தெரியுமா? ரூ.7000 கோடி மோசடி செய்த சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனர் ராமலிங்க ராஜு. இந்த விஷயத்தில் இவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் பராக் ஒபாமை முந்திவிட்டாராம்.கூகுள் இணையதளம் தரும் விவரம் இது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்யம கம்ப்யூட்டர்ஸ் கணக்குவழக்குகளில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்ததை ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.அதில் இருந்தே இன்டர்நெட்டில் அவரை பற்றிய விஷயங்களை தேடி தேடி பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஒபாமாவை வலைவீசி தேடியவர்களும் ராமலிங்க ராஜுவை தேடியவர்களும் ஏறத்தாழ ஒரே எண்ணிக்கையில்தான் இருந்தனர். துல்லியமாக சொன்னால் ஒபாமா கொஞ்சமே கொஞ்சம் முந்தி இருந்தார்.ஆனால் மோசடி செய்தி வெளியான 7ம் தேதியில், ஒபாமா விஷயங்களை தேடியவர்களை விட ராமலிங்க ராஜுவை தேடியவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்தது. அதில் இருந்து ராஜு ராஜ்யம்தான். ஒபாமாவை பின்னுக¢குத் தள்ளி தனது திடீர் பிரபலத்தை நிலைநாட்டி வருகிறார்.மாநில அடிப்படையில் பார்க்கும்போது, ஆந்திராவை சேர்ந்தவர்கள்தான் ராமலிங்க ராஜுவை அதிகம் தேடி உள்ளனர். இரண்டாவது இடத்தில் தமிழகம். கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், டெல்லி ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன. நகரங்களில் ஹைதராபாத், சென்னை, பெங்களூர் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. நாட்டுக்கு வெளியே, எமிரேட்ஸ், சிங்கப்பூர், பின்லாந்து, அமெரிக்கா, போலந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் ராஜு பற்றி கூகுள் இணையதளத்தில் அதிக அளவில் தேடி இருக்கிறார்கள்

No comments: